இலங்கை

தயாசிறியின் கோரிக்கை மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தடையின்றி கடமையாற்றுவதற்கு இடமளிக்குமாறு அந்தக் கட்சிக்கு உத்தரவிடக் கோரி, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதை இம்மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டது. 

இந்த உத்தரவு இன்றைய தினம் (06) அறிவிக்கப்படவிருந்த போதிலும், அதனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தன்னை ஏற்றுக்கொண்டு மாவட்ட நீதிமன்றத்தினால் இதற்கு முன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக முறைப்பாட்டாளரான தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார். 

அந்த உத்தரவிற்கு இணங்க, குறித்த பதவியில் தம்மால் எவ்வித இடையூறுகளும் இன்றி கடமையாற்றுவதற்கு அவசியமான கட்டளையைப் பிறப்பிக்குமாறு கோரி தயாசிறி ஜயசேகர இந்த முறைப்பாட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…