இலங்கை

கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்!

ரத்மலானை, தர்மாராம வீதிப் பகுதியில் ரயில் வீதிக்கு அருகில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் முற்றியதில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த இளைஞர் கிரிக்கெட் மட்டை மற்றும் விக்கெட் தடிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட அறுவர் கல்கிஸ்ஸ பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். 

இச்சம்பவத்தில் ரத்மலானை, ஸ்ரீ தர்மாராம வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…