இலங்கை

O/L பரீட்சையில் சித்தியடைந்த 300 மாணவர்களுக்கு நிதியுதவி

நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நமக்குள் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

14 வது மகாத்மா காந்தி கல்விப்புலமைப்பரிசில் வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இதன்போது 2020/21 ஆம் கல்வி ஆண்டுகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 300 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. 

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்: 

“நாங்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் என்றால், அந்த மாற்றம் நமக்குள் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். நாம் மாறினால் மாத்திரமே நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை அடைய முடியும். 

அந்த மாற்றத்திற்கு நீங்கள் தலைமை தாங்குங்கள். அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், அதனை முதலில் உங்களிலிருந்து தொடங்க வேண்டும். நீங்கள் எத்தகையதொரு நாட்டை உருவாக்க நினைக்கிறீர்கள்? எத்தகைய சமூகத்தில் வாழ எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் உங்களிடம் இருக்கிறதா என்று நாம் முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

அந்த மாற்றத்திற்காக முன்நிற்பதன் மூலமே எம்மால் சமூகம், நாடு மற்றும் உலகத்தை மாற்ற முடியும். தற்போதைய தருணம் எமது கல்வி முறை மற்றும் பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் ஒரு உருமாற்றத்தை நோக்கிய மாற்றத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு காலப்பகுதியாகும்.” என்றார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…