இலங்கை

‘AI Impact’ மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இந்தியா பயணம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு  தொடர்பான ‘AI Impact’ சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று (17) பிற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

அதற்கமைய, ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கைக் குழுவினர் இன்று பிற்பகல் 02.05 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-195 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…