இலங்கை

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் தீர்மானம்

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான கூட்டமொன்றில், இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுக்கும் ரயில் சாரதிப் பயிற்சி அளிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் சேவையிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பாகப் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் நிறைவடைந்தன.

இந்நிலையில் இன்று மாலை கூடிய லோகோமோட்டிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு, இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…