இலங்கை

தொடங்கொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் விசேட சோதனை

களுத்துறை, தொடங்கொட நுழைவாயில் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் நேற்று (20) இரவு விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்களைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது, குறித்த வாகனங்களில் பயணிக்கும் நபர்கள் தொடர்பிலும் தொடங்கொட பொலிஸார் மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…