இலங்கை

ரயிலுடன் மோதிய கெப் வாகனம்

இன்று காலை 7.30 மணியளவில் காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில், கெப் வாகனத்தின் சாரதி பலத்த காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை எனவும், குறித்த ரயில் கடவையில் முறையான பாதுகாப்பு கேட் பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு ரயிலுடன் மோதிய கெப் வாகனம் அருகில் உள்ள நிர்மாணத் திட்டமொன்றில் பணிபுரியும் ஒருவருடையது என தெரியவந்துள்ளதுடன், ரயிலில் மோதியதையடுத்து கெப் வாகனம் சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கெப் வாகனத்தின் சாரதி உட்பட மூன்று நபர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…