இலங்கை

ஜனவரி மாத இலங்கையின் பணவீக்கம் 2.4 சதவீதமாக வீழ்ச்சி!


இலங்கையின் முதன்மை பணவீக்க விகிதமானது கடந்த ஜனவரி மாதத்தில் 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இந்தப் பணவீக்கமானது, கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2.9 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், தற்போது 0.5 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.
குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைக் குறிக்கும் உணவுப் பணவீக்கமானது டிசம்பர் மாதத்தில் காணப்பட்ட 4.4 சதவீதத்திலிருந்து ஜனவரி மாதத்தில் 3.4 சதவீதமாகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

அதேவேளை, உணவு அல்லாத வகைப்பாட்டிலான பணவீக்கமானது எவ்வித மாற்றமுமின்றி 1.6 சதவீதத்திலேயே நீடிக்கின்றது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் வேகம் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் ஓரளவுக்குக் குறைந்துள்ளதை இந்தப் புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…