இலங்கை

சமூக சேவை உத்தியோகத்தர் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது!

கடான பிரதேச செயலகத்தின் முன்னாள் சமூக சேவை உத்தியோகத்தர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் நேற்று (24) பிற்பகல் 12.45 மணியளவில் இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தினால் ஒரு பிள்ளைக்கு ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் 10,000 ரூபா கல்வி உதவித் தொகையை, இரண்டு பிள்ளைகளின் பெயரில் பெற்றுக்கொண்டு, அதனை அந்தப் பிள்ளைகளுக்கு வழங்காது தனது தனிப்பட்ட பாவனைக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…