இலங்கை

சட்டவிரோதமாக டீசல் விற்றவர் கைது: 390 லீற்றர் மீட்பு

புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (03) இரவு வேளையில் புல்மோட்டைபொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது பொலிஸார் குறித்த வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேகநபரை கைது செய்துள்ளதோடு, அவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 390 லீற்றர் டீசலையும் பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அர்பத் நகர், புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார். 

சந்தேகநபர் இன்று (04) குச்சவெளி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, புல்முடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…