இலங்கை

இன்று முதல் பஸ் கட்டணம் உயர்வு? கணக்கீட்டுப் பணிகள் தீவிரம்!

இன்றைய தினம் (22) பேருந்து கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. 

இதற்குத் தேவையான கணக்கீட்டு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கு முன்னர் பல தடவைகள் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. 

இதேவேளை, பேருந்து கட்டணங்களை குறைந்தபட்சம் 15 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

நேற்று (21) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் டீசல் விலை 31 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதை அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…