இலங்கை

இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேங்காய் எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின்கட்டண அதிகரிப்பு காரணமாக கடந்த வாரமும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

அதற்கமைய பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து கடந்த வாரம் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டன.

அத்துடன், சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும், தேநீர் வகைகள் 05 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…