No products in the cart.
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று வலுவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 311 ரூபா 73 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன் விற்பனை விலை 319 ரூபா 25 சதமாக பதிவாகியுள்ளது.
மேலும், பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபா வலுப்பெற்றுள்ளது.














