இலங்கை

போதைப்பொருள் வேட்டை தீவிரம் – 3 மாதங்களில் 10 மீன்பிடி படகுகள் சுற்றிவளைப்பு!

இந்த ஆண்டின் கடந்த 3 மாத காலப்பகுதிக்குள் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற 10 உள்நாட்டு நெடுநாள் மீன்பிடி படகுகள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. 

போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகொன்று இன்று (17) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், கடற்படை ஊடகப் பேச்சாளர் புத்திக சம்பத் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். 

குறித்த படகுகளில் இருந்து ஐஸ், ஹெரோயின், ஹசீஸ் மற்றும் கொக்கைன் போன்ற பிரதான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

இதற்கமைய, அந்தப் நெடுநாள் மீன்பிடி படகுகளில் இருந்து 1,800 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி சுமார் 44 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…