இலங்கை

லிட்ரோ எரிவாயு விநியோகம் தொடர்பில் பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு

இலங்கையில் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. 

அதன்படி, மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் மேலும், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது.

மேலும் 17500 மெட்ரிக் தொன் எரிவாயு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20000 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல் ஒன்று தென்னாபிரிக்கா வழியாக மாலைத்தீவை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மே மாதத்திற்கும் போதுமான எரிவாயு கையிருப்பில் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…