இலங்கை

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 2 மீனவர்கள் மாயம்!


முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். 

நேற்று முன்தினம் (2) காலை ப10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றுள்ளனர். 

எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

அதேநேரம் பிரதேச மீனவர்கள் இணைந்து படகுகளில் சென்று குறித்த கடற்பகுதியில் நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

எவ்வாறாயினும் அந்த தேடுதல் முயற்சி தோல்வியடைந்ததுடன், இன்றும் தேடுதல் பணிகளில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…