இலங்கை

கம்பன் விழா மேடையில் ஜனாதிபதிக்கு சிறப்பு அங்கீகாரம்!

தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான “கம்பன் விழா” நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்றார். 

நேற்று (03) பிற்பகல் கம்பன் விழாவானது வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் இடம்பெற்றது. 

சிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான கம்பரின் பெயரில் அகில இலங்கை கம்பன் கழகம் 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது. 

இங்கு கருத்துரைத்த ஜனாதிபதி இலக்கியம், நடனம் மற்றும் இசை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, இளைய தலைமுறையினரை கலாசார விழுமியங்கள் மற்றும் தேசப்பற்றுடன் கூடிய தர்மத்தின் வழியில் வழிநடத்துவதற்கு கம்பன் கழகம் ஆற்றிவரும் சேவையை பாராட்டினார். 

இதன்போது ஜனாதிபதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…