இலங்கை

ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று (15) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் ஆ.சுமதி தெரிவித்தார். 

சீரற்ற வானிலை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

எனவே, இன்றைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏனைய விடயங்களுக்காக பாடசாலைகளுக்கு அழைப்ப​தை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், நுவரெலியா வலயப் பாடசாலைகளுக்கும் தேவை ஏற்படின், வலயக் கல்விப் பணிப்பாளர்களின் ஆலோசனையின் பேரில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…