இலங்கை

24 மணித்தியாலங்களில் கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவானது!

கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 244 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நேற்று (21) காலை 8.30 மணி முதல் இன்று (22) அதிகாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் மழைவீழ்ச்சி மையங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் வெயங்கொட பகுதியில் 238 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும், கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பகுதியில் 230 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…