இலங்கை

ஜூன் 15 முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்!

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வரும் 15-ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. 

தற்போது நாடு முழுவதும் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார். 

டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, கடந்த 8, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளிலும் நாடு தழுவிய ரீதியில் விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

டெங்கு நோய் பரவலை மேலும் கட்டுப்படுத்துவதற்காக, உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் நுளம்பு ஒழிப்பு வாரம் ஒன்றைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்தியர் நிபுணர் பிரஷிலா சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…