இலங்கை

பாரியளவான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் (Ice) போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

நேற்று (10) இரவு பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேரஹெர பகுதியில், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

இதன்படி, 1 கிலோகிராம் 80 கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிலோகிராம் 24 கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் வேரஹெர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொண்டு உள்நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…