இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்பு குழுவுக்கு அமைச்சரவை அனுமதி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் 

ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ 

நிதி மற்றும் கார்ப்பரேட் மூலோபாய நிபுணர் தேஷால் டி மெல் 

பரிவர்த்தனைகள் மற்றும் முதலீட்டு வங்கித் தொழில், நிறுவனங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் நிபுணர் துமித் பெர்னாண்டோ 

நிதி அமைச்சின் செயலாளர் அல்லது அவரது பிரதிநிதி ஒருவர் 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் / சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பிரதிநிதி அல்லது பிரதிநிதிகள் 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் 

விமானப் போக்குவரத்து மற்றும் பொதுச் சட்டம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த சட்ட வல்லுநர்கள் 

விமானப் போக்குவரத்து துறைசார் நிபுணர்கள்

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…