இலங்கை

கம்பஹாவில் திடீர் நீர்வெட்டு அமுல்

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று (19) முற்பகல் முதல் அவசர நீர்விநியோகத் தடை அமுலாகியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

நாளை (20) முற்பகல் 8.00 மணி வரை இந்த அவசர நீர் விநியோகத் தடை அமுலாகும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. 

கடவத்தை, மத்திய அதிவேக வீதிக்கு அருகில் உள்ள பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக இந்த நீர்விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…