இலங்கை

ஜூலை மாதத்தில் கொழும்பு பணவீக்கம் அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான பணவீக்கம் 7.3% ஆக அதிகரித்துள்ளது. 

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், கடந்த ஜூன் மாதம் 6.8% ஆகக் காணப்பட்ட பணவீக்கம் 7.3% ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், உணவுப் பணவீக்கமும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதுடன், அது 3.6% இல் இருந்து 6.3% ஆக உயர்வடைந்துள்ளது. 

உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம் 2026 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் சற்று குறைவடைந்துள்ளதாகவும், அதன்படி ஜூன் மாதத்தில் 8.4% ஆகக் காணப்பட்ட அதன் பெறுமதி 7.8% ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…