இலங்கை

ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையை திருத்தம் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. 

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் நாணய மாற்று வீதங்களில் காணப்படும் சவாலான சூழ்நிலைகள் மத்தியிலும், நுகர்வோர் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஓகஸ்ட் மாதத்தில் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டாம் என தீர்மானித்ததாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

அதற்கமைய, 2026 ஓகஸ்ட் மாதத்திற்காக தற்போது காணப்படும் விலைகளே தொடர்ந்து செல்லுபடியாகும் என்பதுடன், 

12.5 கிலோ கிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் – ரூ. 4,465 

5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் – ரூ. 1,792 

2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் – ரூ. 835 

என தொடர்ந்தும் காணப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…