இலங்கை

இன்று ஆரம்பமாகிறது செப்டெம்பர் மாத பாராளுமன்ற அமர்வு! நாமல் கலந்து கொள்ள அனுமதி!

செப்டெம்பர் மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரமானது இன்றைய தினம் (08) ஆரம்பமாகவுள்ளது. 

இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடும் என பாராளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இன்றைய தினம் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2489/22 மற்றும் 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரு கட்டளைகள் அங்கீகாரத்திற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

நாளை (09) பாதுகாப்புப் படைகளின் தலைமை பிரதானி (நீக்கம் செய்தல்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது. 

செப்டெம்பர் 10ஆம் திகதி வியாழக்கிழமை பெண்கள் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்படும் பிரேரணை அங்கீகாரத்திற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…