No products in the cart.
22 தொடர்பில் முக்கிய விவாதம் – இரண்டு நாட்கள் ஒதுக்கீடு!
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் நீதிமன்ற அமைப்பு (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை எதிர்வரும் செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இன்று (10) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் குறித்த சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை அன்றைய தினங்களில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.














