இலங்கை

டித்வா முன்னாயத்தம் தொடர்பான விசாரணைக் குழுவின் காலக்கெடு நீடிப்பு!

டித்வா புயலை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தங்களில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த விசேட குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த காலப்பகுதிக்குள், புயலை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தங்கள் தொடர்பில் அவதானிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் அவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்படவுள்ள பரிந்துரைகளை முழுமையாகத் தொகுத்து அறிக்கையிடுவதற்கு மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 2026 ஜனவரி 21ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குழுவின் பணிகளை நிறைவு செய்வதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம், விசேட குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. டித்வா புயலை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள், அவற்றில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களை திறம்பட எதிர்கொள்வதற்கான பரிந்துரைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குழுவின் இறுதி அறிக்கை முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…