இலங்கை

யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேந்தான்குளம் பகுதியில் கடல் ஆமைகளுடன் படகொன்றில் நபர் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர், ஆமைகளுடன் கரை சேர்ந்த நபரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 50 கிலோவிற்கும் அதிக எடையுள்ள இரண்டு ஆமைகளும், ஆமைகளைக் கரைக்குக் கொண்டு வரப் பயன்படுத்திய படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…