இலங்கை

தலவாக்கலையில் மின்னல் தாக்கி நபரொருவர் ப

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் இன்று (03) பிற்பகல் மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். தலவாக்கலை பாமஸ்டன் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பிரமணியம் தேவகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இன்று பிற்பகல் தலவாக்கலை பாமஸ்டன் தோட்டப் பகுதிகளில் பலத்த இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதன்போது, வீடு ஒன்றில் நான்கு பேர் ஒன்றாக இருந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில், இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…