இலங்கை

அனோஜனை மீட்க இணைந்த இலங்கை சட்டத்தரணிகள் 

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழுவொன்று பங்கேற்றுள்ளது. இதற்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி ஆகியோர் இதில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், ஜெத்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் நாயகம் நீதிபதி எம்.டீ. மொஹமட், சட்டத்தரணி ஃபாரிஸ் ஃபஸால் அப்துல் ஹஃபீல் மொஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் இணைப்புச் செயலாளர் மொஹமட் ரியாஸ்தீன் சில்மி ஆகியோரும் இந்தத் தூதுக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…