No products in the cart.
நாளை 150 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்
நாளை (14) நாட்டின் ஆறு மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் இவ்வாறு பலத்த மழை பெய்யக்கூடும்.அத்துடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அந்த் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.நாட்டைச் சூழவுள்ள வங்காள விரிகுடா கடற்பரப்பின் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.














