இலங்கை

இலங்கையின் பொருளாதாரம் குறித்து IMF கணிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அண்மைய ‘உலக பொருளாதார தொலைநோக்கு’ (World Economic Outlook) அறிக்கையின்படி, 2027 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3.7 சதவீதம் வரை மட்டுமே அடையும் என கணிப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நடப்பு ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.0 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், 2027 ஆம் ஆண்டில் இலங்கையின் பணவீக்க விகிதம் 5.4 சதவீதமாகவும், வேலையின்மை விகிதம் 3.9 சதவீதமாகவும் காணப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் இந்த புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.அதேநேரம், 2026 ஆம் ஆண்டில் 3.1 சதவீதமாகவும், 2027 ஆம் ஆண்டில் 3.4 சதவீதமாகவும் உலகப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.அத்துடன், உலகளாவிய முதன்மைப் பணவீக்கம் நடப்பு ஆண்டில் 4.7 சதவீதம் வரை உயர்ந்து, 2027 ஆம் ஆண்டளவில் 4.1 சதவீதம் வரை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…