No products in the cart.
பாப்பரசர் லியோவின் நுரையீரல் புற்றுநோய் சத்திர சிகிச்சை வெற்றி
14வது பாப்பரசரான லியோவுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. அவரது வலது நுரையீரலின் கீழ் பகுதியிலேயே புற்றுநோய் ஏற்பட்டிருந்த நிலையில் இவ்வாறு வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக வத்திக்கான் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 71 வயதான அவருக்கு, இன்று ரோமிலுள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் 90 நிமிடங்களுக்கு அதிக காலம் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பிறகு அவருக்கு நுரையீரல் அடினோகார்சினோமா (lung adenocarcinoma) இருப்பது உறுதி செய்யப்பட்டது.














