இலங்கை

நீதிமன்ற அவமதிப்பு – கெஹெலிய உள்ளிட்டோருக்கு எதிராக மனு

உயர்நீதிமன்ற உத்தரவொன்றை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா’ (Transparency International Sri Lanka) அமைப்பு உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. மருந்துகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்ற முறைகேடு காரணமாக அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல 75 மில்லியன் ரூபாயையும், சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.டீ. ஜெயரத்ன மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாயையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…