No products in the cart.
பாகிஸ்தான் சுப்பர் லீக் : மூன்றாவது முறையாவும் கிண்ணத்தை சுவீகரித்த லாகூர் அணி!
பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி லாகூர் குவலெண்டர்ஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடித்தாடிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 79 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
லாகூர் குவலெண்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் சஹீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுக்களையும் சல்மான் மிர்சா மற்றும் ஹரிஸ் ரவூப் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். இந்நிலையில், 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய லாகூர் குவலெண்டர்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
லாகூர் குவலெண்டர்ஸ் அணியின் சார்பாக குசல் ஜனித் பெரேரா சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் மொஹமட் நஹீம் 46, அப்துல்லா சபீக் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் ஊடாக பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் லாகூர் குவலெண்டர்ஸ் அணி மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகனாக குசல் ஜனித் பெரேராவும், தொடரின் சிறப்பாட்டக்காரராக ஹசீம் நவாஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.