No products in the cart.
ஜப்பானில் நில அதிர்வு
ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள ஹொக்கைடோவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு இன்று பிற்பகல் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் ஹொக்கைடோவின் கிழக்கு கடற்கரையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குஷிரோ, ஷிபெச்சா, ஹொன்ஷு ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
நிலநடுக்கம் பல பகுதிகளில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்திய போதிலும், இதுவரை எவருக்கும் காயமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.