இலங்கை

வௌ்ளவத்தையில் மாடியில் இருந்து விழுந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பிளேஸில் உள்ள 5 மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசையா தவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் 3 வருடங்களுக்கு முன்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பிளேஸில் உள்ள ஒரு வர்த்தகரின் வீட்டிற்கு காவலாளியாக வேலைக்கு வந்துள்ளார்.

மேல் மாடியில் உள்ள நடைபாதைக்கு அருகில் இன்று (04) காலை மர கைப்பிடியால் செய்யப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தி யன்னல் அடைப்புகளை சுத்தம் செய்யும் போது அவர் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…