இலங்கை

இரகசிய தகவலின் படி வவுனியாவில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு!

வவுனியாவில் வீட்டில் மறைந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோகிராம் கஞ்சாவினை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வவுனியா, கதிரவேல்பூவரசங்குளம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 10 கிலோகிராம் கஞ்சாவினை கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய ஒருவரை கைது செய்து ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…