இலங்கை

கம்மன்பில சிஐடியில் இருந்து வெளியேறினார்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இன்று காலை குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையான அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுங்கத் துறையினரால் முறையாக ஆய்வு செய்யாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக உதய கம்மன்பில சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…