இலங்கை

கதிர்காம காட்டுப்பாதை 20 ஆம் திகதி திறக்கப்படும்

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, மீண்டும் குறித்த காட்டுப்பாதை ஜூலை மாதம் 04 ஆம் திகதி மூடப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம தெரிவித்தார்.

கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 11 ஆம் திகதி தீர்த்தோற்சவ அத்துடன் நிறைவடையும் என கூறினார்.

கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக செல்வோர் உகந்தமலை முருகன் ஆலயத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து குமண யால காட்டினூடாக பிரவேசித்து கதிர்காமத்தை சென்றடைவது வழக்கமாகும்.

வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி காலை உகந்தமலை முருகன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் ஆரம்ப வைபவத்தை அடுத்து காட்டுப்பாதை காலை ஆறு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை மாத்திரமே திறந்து இருக்குமெனவும் அக் காலப்பகுதிக்குள் மட்டுமே காட்டுக்குள் செல்ல யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…