No products in the cart.
தெற்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 51 பேர் பலி
தெற்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 51 பேர் பலி
தெற்கு காசா பகுதியில் உள்ள உதவி விநியோக மையத்தின் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் 51க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
காசா பகுதியில் உள்ள உதவி விநியோக மையங்களுக்கு அருகில் தினமும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது நடந்த இந்த தாக்குதலிலேயே அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மற்றும் காயங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் மாவு விநியோகிக்கப்படும் மற்றொரு இடத்தில் இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.