வணிகம்

கூட்டாக இணைந்து பிரச்சினைகளைத் தீர்ப்பதன் ஊடாகப் பகுப்பாய்வு சிந்தனையைக் காட்சிப்படுத்திய SLIIT MATHFEST 2025

கூட்டாக இணைந்து பிரச்சினைகளைத் தீர்ப்பதன் ஊடாகப் பகுப்பாய்வு சிந்தனையைக் காட்சிப்படுத்திய SLIIT MATHFEST 2025
கணிதத்தின் சிறப்பைக் கொண்டாடும் வகையில் SLIIT இன் கேட்போர் கூடத்தில் மே 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற MATHFEST 2025நிகழ்ச்சி பகுப்பாய்வு சிந்தனை மற்றும் கூட்டாக இணைந்து பிரச்சினைகளைத் தீர்ப்பதன் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. SLIIT இன் மனிதநேயம் மற்றும் விஞ்ஞானபீடத்தின் கணித மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட MATHFES நிகழ்வில், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டைங்களைச் சேர்ந்த 45 பாடசாலைகளைச் சேர்ந்த க.பொ.த உயர்தர மாணவர்கள் சவால் மிக்க போட்டியில் பங்கேற்றனர்.

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி MATHFEST 2025 இன் வெற்றியாளர்களாகத் தெரிவுசெய்யப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கல்லூரிகளில் வெயாங்கொட பண்டாரநாயக்க மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு 07 விசாகா கல்லூரி என்பன உள்ளடங்குகின்றன. இதில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் முயற்சியை அங்கீகரித்து சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

அழுத்தம் நிறைந்த சூழலில் மாணவர்கள் விரைவாகவும், துல்லியமாகவும் செயற்படும் திறன் மற்றும் கணித ரீதியான பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றலை சோதிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பல்வேறு கணித சிக்கல்கள் காட்சிப்படுத்தப்பட்டன, இவை மாணவர்களின் அழுத்தத்தின் கீழ் வேகம் மற்றும் துல்லியத் திறன்களைச் சோதிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. வெற்றியுடன் முடிவடைந்த இந்தப் போட்டி, அனைத்து விஞ்ஞானங்களினதும் இராணியாகத் திகழும் கணிதத்தின் மீதான ஆழமான ஈடுபாட்டைத் தூண்டும் வகையில் அமைந்தது. இதில் பங்கேற்ற அனைவரும் அற்புதமான திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தினர். அவர்களின் சாதனைகள் போட்டிகளுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை பிரதிபலித்ததுடன், மாணவர்கள் சிறந்து விளங்கவும், தமக்குள் விமர்சன சிந்தனையை வளர்த்துக் கொள்வதற்கும் இது உதவியாக அமைந்திருந்தது.

இந்தப் போட்டியானது கணினி அடிப்படையிலான பல்தேர்வு வினாக்கள் அதனைத் தொடர்ந்து குழுவாக இணைந்து பணியாற்றும் ஆற்றல் மற்றும் விரைவாகச் சிந்திக்கும் திறனைத் தூண்டும் வகையிலான மேடையில் இடம்பெற்ற பஸர் சுற்று ஆகியவற்றைக் கொண்டதாக அமைந்ததது. மாணவர்கள் தமது உற்சாகமான பங்கேற்பு, அறிவுசார் திறமை, ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்தி, ஒவ்வொரு குழுவும் இணைந்து சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உழைத்தனர்.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினர் சம்பத் வங்கி பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அயோத்யா இத்தவெல பெரேரா உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருந்தினர்களின் வருகையானது இந்தப் போட்டி நிகழ்ச்சிக்கான முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியதுடன், கல்வி மற்றும் புதுமை குறித்த தொழில்துறை கண்ணோட்டங்களுடன் கல்வித் துறையை இணைத்தது.

முக்கியமாக, MATHFESTt 2025 போட்டி நிகழ்ச்சி இளையோரின் தர்க்கரீதியான பகுத்தறிவு, ஆக்கப்பூர்வமான முறையில் சிக்கல்களைத் தீர்க்கும் திறன் மற்றும் பயனுள்ள தகவல் தொடர்பு ஆகியவற்றின் விமர்சனத் திறன்களை நேரடியாக அனுபவிக்கக்கூடிய ஒரு அரங்கமாக இருந்தது. இந்தப் பண்புக்கூறுகள் கணிதத்தில் மட்டுமல்லாமல் பகுப்பாய்வு சிந்தனையை நம்பியிருக்கும் பல்வேறு துறைகளிலும் அவசியம்.

கணிதம் மற்றும் புள்ளியியல் துறைத் தலைவர் பேராசிரியர் சரத் பீரிஸ், “கணிதம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்குகிறது. பகுப்பாய்வு மற்றும் தர்க்கரீதியான சிந்தனை கணிதத்தில் முக்கிய செயல்பாடுகள். ஒரு குழுவாக கணித சிக்கல்களைத் தீர்ப்பதன் மூலம் பகுப்பாய்வு மற்றும் தர்க்கரீதியான சிந்தனையை வளர்ப்பதற்கான சூழலை MATHFEST உருவாக்குகிறது” என்ற நிகழ்வைப் பற்றி தனது கருத்துக்களைச் சேர்த்தார்.

கணித மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தலைவர் பேராசிரியர் சரத் பீரிஸ் இந்த நிகழ்வு குறித்த தனது கருத்தைத் தெரிவிக்கையில், “கணிதம் உங்கள் வாழ்க்கையை இலகுபடுத்துகின்றது. கணிதத்தில் பகுப்பாய்வு மற்றும் தர்க்கரீதியான சிந்தனை முக்கிய செயல்பாடுகளாகும். ஒரு குழுவாக கணித சிக்கல்களைத் தீர்ப்பதன் மூலம் பகுப்பாய்வு மற்றும் தர்க்கரீதியான சிந்தனையை வளர்ப்பதற்கான சூழலை MATHFEST உருவாக்குகிறது” என்றார்.

கணிதம் தொடர்பான புரிதல் மற்றும் அதன் பாராட்டும் தன்மையை மேம்படுத்தும் வகையில், இந்தப் போட்டி சிந்தனையில் தீவிரமாகவும் ஒழுங்கான அணுகுமுறையை மதிக்கும் நோக்குடன் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காண உதவியது. MATHFEST 2025 நிகழ்வு, மாணவர்கள் தங்களை சவாலுக்கு உள்ளாக்குவதற்கும், கணிதத்தின் அழகையும் சக்தியையும் கொண்டாடுவதற்குமான ஒரு அரிய வாய்ப்பை வழங்கியது.

What's your reaction?

Related Posts

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியுடன் கைகோர்த்து அமெரிக்க உறக்கம்சார் தீர்வுகள் வழங்குனரான Englander இலங்கையில் பிரவேசம்

இலங்கையின் மாபெரும் மற்றும் பரந்தளவு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை…