வணிகம்

தனது டிஜிட்டல் தயாரிப்புகளை பரவலாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க ‘வடக்கினை வலுப்படுத்தல்’ நிகழ்ச்சியை நடத்திய கொமர்ஷல் வங்கி

கொமர்ஷல் வங்கியானது அண்மையில் நாட்டின் டிஜிட்டல் மாற்ற நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதற்கும் அதன் முதன்மை டிஜிட்டல் வங்கி தளமான கொம்பேங்க் டிஜிட்டல் மூலம் பிராந்திய ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஷவடக்கினை வலுப்படுத்துதல்| டிஜிட்டல் சிறப்பை துரிதப்படுத்துதல் என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் டிஜிட்டல் விழிப்புணர்வு முயற்சி திட்டமொன்றினை நடத்தியது. திண்ணை ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வை, வங்கியின் டிஜிட்டல் வங்கிப் பிரிவு, வட பிராந்திய அலுவலகம் மற்றும் மையப்படுத்தப்பட்ட செயல்பாட்டு பிரிவுகளின் ஆதரவுடன் ஏற்பாடு செய்திருந்தது. இதில் வாடிக்கையாளர்கள், சிரேஷ்ட வங்கி அதிகாரிகள் மற்றும் பல்வேறு வர்த்தக பிரிவுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த அமர்வானது, கொம்பேங்க் டிஜிட்டல் இன் அம்சங்கள் மற்றும் சேவைகள் மற்றும் வங்கியின் பிற டிஜிட்டல் தயாரிப்புகளின் முழு நோக்கம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு தகவல்கள் மற்றும் அறிவினை வழங்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்டிருந்ததுடன் அணுகலை உறுதி செய்வதற்காக தமிழ் மொழியில் செயல்விளக்கங்கள் மற்றும் விளக்கக்காட்சிகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த அமர்வானது பிராந்தியத்தில் தனிநபர்கள், SMEயினர் மற்றும் நிறுவனங்களுக்கான நிதியியல் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த, பில் செலுத்துதல்கள் முதல் H2H (Host-to-Host) மற்றும் ComBank Trade Link போன்ற மேம்பட்ட சேவைகள் வரை அன்றாட நிதியியல் நடவடிக்கைகளில் தளங்களை எவ்வாறு தடையின்றி ஒருங்கிணைக்க முடியும் என்பதை காட்சிப்படுத்தியது.

விளக்கக்காட்சியைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் விருந்துபசார நிகழ்விலும் பங்கேற்றதுடன் இது வங்கி பிரதிநிதிகளுடன் நேரடியாக உரையாடலில் ஈடுபடவும், கொம்பேங்க் டிஜிட்டல் உடன் நேரடி அனுபவத்தைப் பெறவும், கருத்துக்களை வழங்கவும் வாய்ப்பளித்தது. இந்த ஊடாடும் வடிவமானது சில்லறை நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் தொடர்பான டிஜிட்டல் வங்கி தீர்வுகள் குறித்த வாடிக்கையாளர் புரிதலை மேலும் ஆழப்படுத்த உதவிய அதே வேளை வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புத்தாக்கத்திற்கான வங்கியின் உறுதிப்பாட்டின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியதாகவும் வங்கி தெரிவித்துள்ளது. இந்த முயற்சி தொடர்பாக கருத்து தெரிவித்த வங்கியின் தனிநபர் வங்கிப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் திரு. எஸ். கணேசன், எமது டிஜிட்டல் திறன்களை வாடிக்கையாளர்களின் வாசலுக்கு எடுத்துச் செல்வதே எமது மாற்றத்திற்கான பயணத்தின்

நோக்கமாகும். இந்த முயற்சிகள் மூலம், எமது தளங்களை நாம் காட்சிப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், ஒவ்வொரு வாடிக்கையாளரும் – பிராந்தியத்தைப் பொருட்படுத்தாமல் – எமது மிகவும் மேம்பட்ட டிஜிட்டல் கருவிகளிலிருந்து பயனடையத் தயாராக இருப்பதை உறுதி செய்கிறோம். இது போன்ற நிகழ்வுகள் உள்ளூர் தேவைகளை நிவர்த்தி செய்ய உதவுகின்றன, மேலும் டிஜிட்டல் பயன்பாடானது புதிய வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளில் மாற்றத்தை ஊக்குவிக்கின்றது.

உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது.

மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.

What's your reaction?

Related Posts

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியுடன் கைகோர்த்து அமெரிக்க உறக்கம்சார் தீர்வுகள் வழங்குனரான Englander இலங்கையில் பிரவேசம்

இலங்கையின் மாபெரும் மற்றும் பரந்தளவு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை…