வணிகம்

பெண் தொழில்முனைவோருக்கான NDB யின் நடைமுறை வர்த்தக நுண்ணறிவுகளுடன் ஆர்வத்தை இலாபமாக மாற்றுதல்

ஒவ்வொரு வெற்றிகரமான வர்த்தகமும் முதல் விற்பனைக்கு நீண்ட காலத்திற்கு முன்னரே ஆரம்பிக்கப்படுகிறது. அது உங்கள் தீவிர சிந்தனையுடன் உற்சாகமாக உங்களால் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் அந்த சிந்தனையை உண்மையான ஒன்றாக மாற்றுவதற்கு ஆர்வம் மட்டுமே அவசியமாகிறது. இதற்காக முதற்படியை நீங்கள் முன்னெடுத்து வைக்க திட்டமிடல், கட்டமைப்பு மற்றும் தன்னம்பிக்கை என்பன தேவைப்படுகின்றன.

நீங்கள் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் ஒருவேளை உங்கள் சொந்த சிகையலங்கார நிலையம், சிற்றுண்டிச்சாலை [கஃபே] ஆடை வர்த்தகநாமம் அல்லது ஒரு சிறிய அளவிலான வீட்டு கைத்தொழில் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற கனவு இருந்தால், உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: நான் என்ன விடயத்தைத் தீர்க்கப்போகிறேன் , யாருக்கு இந்த தீர்வு உண்மையில் தேவை? உங்கள் பதில் தெளிவாக இருந்தால், உங்கள் அடித்தளம் வலுவாக இருக்கும்.

நீடித்து உழைக்கக்கூடிய ஒரு வர்த்தகமானது சேவையை வழங்கக்கூடிய ஒன்றாகும். உண்மையிலேயே நிலையானதாக இருப்பதற்கு உங்கள் சிந்தனையானது உங்கள் சமூகத்தின் உண்மையான தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும் அல்லது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை தீர்க்க வேண்டும். உங்கள் வர்த்தகமானது தீர்வின் ஒரு பகுதியாக மாறும்போது, ​​அது இயல்பாகவே பொருத்தம், விசுவாசம் மற்றும் நீண்டகால பெறுமதியை உருவாக்குகிறது. அங்கிருந்து, உங்கள் சிந்தனைக்கு ஒரு வரைபடத்தைக் கொடுங்கள். ஒரு வணிகத் திட்டம் நீண்டதாகவோ அல்லது சிக்கலானதாகவோ இருக்க வேண்டியதில்லை, ஆனால் அது சிந்தனைக்குரியதாக இருக்க வேண்டும். இது அடிப்படைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்: நீங்கள் என்ன வழங்குகிறீர்கள், உங்கள் வாடிக்கையாளர் யார், நீங்கள் அவர்களை எவ்வாறு அடைவீர்கள், செயல்பட எவ்வளவு செலவாகும், காலப்போக்கில் அதை எவ்வாறு நிலைநிறுத்துவீர்கள்?. அதை எழுத்தில் வரைபடமாக அமைப்பது உங்கள் தரநிலைகளுடன் இணங்குவதும் நமது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வளர்ச்சிக்கான கதவைத் திறக்கிறது.

வெளிப்படுத்தும் நிலையும் முக்கியம். சிறந்த தயாரிப்புக்கு கூட சரியான வெளிப்பாடு தேவை. நீங்கள் ஒரு வரவு செலவு திட்டத்திற்கிணங்க பணி புரிகிறீர்கள் என்றால், உங்கள் குரலைப் பயன்படுத்துங்கள், ஏனென்றால் உங்களை விட வேறு யாரும் உங்கள் கதையைச் சிறப்பாகச் சொல்ல முடியாது. சமூக ஊடகங்களில் இருப்பை உருவாக்குங்கள். வாடிக்கையாளர்களுடன் நேரடியாக உரையாடலில் ஈடுபடுங்கள். உள்நாட்டில் செல்வாக்கு செலுத்துபவர்கள் அல்லது விற்பனையாளர்களுடன்பங்குதாரராக இருங்கள். சென்றடைதலை அதிகரிக்க ஊக்குவிப்புகள் அல்லது பரிந்துரை போனஸ்களை வழங்குங்கள். உங்கள் வர்த்தகத்திற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது நீண்ட காலத்திற்கான தெரிவாக இல்லாதபோதிலும் அது அவசியமானதாக விளங்குகிறது.

NDB வங்கியின் மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, NDB வங்கியின் வர்த்தக வங்கியியலின் வலயத் தலைவர் பிரதம முகாமையாளர் நீலேந்திர விதானகே தலைமையிலான சமீபத்திய அமர்வின் மையத்தில் இந்த நடைமுறை நுண்ணறிவுகள் இருந்தன. இந்தத் திட்டம் தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களாக மாறுவதற்கான பயணத்தில் பெண்களை வழிநடத்தி ஆதரிக்கும் அதே வேளையில், அந்த நடவடிக்கையை முன்னெடுக்க தயாராக இருக்கும் எந்தவொரு பெண்ணுக்கும் அறிவை அணுகக்கூடியதாகவும், பொருத்தமானதாகவும், அதிகாரம் அளிப்பதாகவும் மாற்றுவதே அதன் நோக்கம் என்பது தெளிவாகிறது.

NDB வங்கியானது நிதிபங்குதாரராக மட்டுமல்லாமல், நிலையான வளர்ச்சி மற்றும் மீள்தன்மைக்கான ஊக்கியாகவும் இலங்கையின் பெண்களுக்கு ஆதரவளிப்பதில் உறுதியாக உள்ளது. பெண்கள் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தைப் பற்றி மேலும் அறிய, https://www.ndbbank.com/banking-on- women/vanithabhimana ஐப் பார்வையிடவும் அல்லது 0765699251 என்ற எண்ணில் திஷானியைத் தொடர்பு கொள்ளவும்.

What's your reaction?

Related Posts

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியுடன் கைகோர்த்து அமெரிக்க உறக்கம்சார் தீர்வுகள் வழங்குனரான Englander இலங்கையில் பிரவேசம்

இலங்கையின் மாபெரும் மற்றும் பரந்தளவு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை…