இலங்கை

விருந்துபசாரம் சுற்றிவளைப்பு – இளம் பெண் உட்பட 21 பேர் கைது

கடுவலை – வெலிவிட்ட பகுதியில் நடைபெற்ற விருந்துபசாரம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, இளம் பெண்ணொருவர் உட்பட 21 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரம் ஒன்றை சுற்றிவளைத்த போதே இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களிடம் கஞ்சா, வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 முதல் 27 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் இன்று (27) கடுவலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…