இலங்கை

முத்துநகர் விவசாயிகள் மீதான பொலிஸாரின் தாக்குதல்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் மீதான பொலிசாரின் தாக்குதல் கண்டிக்கதக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று 29 ஆம் திகதி நடைபெற்றபோதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
முத்துநகர் காணிப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமக்கு நியாயம் வழங்க வலியுறுத்தி திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் மேற்கொண்ட அமைதி போராட்டத்தில் அவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர்.
தாம் ஆட்சிக்கு வந்தவுடன் முத்துநகர் காணிப்பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவோம் என கூறிய இந்த அரசாங்கம் தற்போது அந்த விவசாயிகளை எதிர்கொள்ள முடியாமல் பொலிஸாரை கொண்டு அவர்களை விரட்டுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…