இலங்கை

கம்பஹா தேவா விமான நிலையத்தில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் கம்பஹா தேவா என்ற திசாநாயக்ககே தேவான் மினி திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் இன்று காலை 8.10 மணியளவில் தாய்லாந்துக்கு புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 

சந்தேக நபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 39 வயதானவர் என்றும், அந்தப் பகுதி முழுவதும் நடந்த மனித கொலைகள் மற்றும் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபரை கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…