உலகம்

இந்தியாவுக்கு விதித்த மேலதிக வரி ரஷ்யாவுக்கு பெரிய அடி

இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பதாக கடந்த மாதம் 30ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதால் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். 

அதன் படி கடந்த 7ஆம் திகதி இந்தியாவுக்கு மேலும் 25 சதவீத வரியை விதித்தார். இதையடுத்து, இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த வரி 50 சதவீதமாக உயர்ந்தது. கச்சா எண்ணை வாங்குவதன் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார். 

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் இந்தியா மீது அமெரிக்கா விதித்த அதிக வரிகளால் ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படவில்லை. உலகளாவிய அழுத்தங்கள் மற்றும் இந்தியா உள்பட பல நாடுகள் மீது அமெரிக்கா விதித்த வரிகள் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ரஷ்யா மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ளது. சிறப்பாகச் செயல்பட அவர்களிடம் மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. 

வரிகள்-வர்த்தகங்கள் மூலம் அமெரிக்கா தனது வருமானத்தை ஈட்டுவது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் உள்பட 5 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தது. 

உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறேன். அதில் முதல் 2 நிமிடங்களில் ஒப்பந்தம் ஏற்படும் தகுதி உள்ளதா இல்லையா என்பது எனக்கு சரியாக தெரிந்து விடும். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என எதிர்பார்த்து இருக்கிறேன். இரு தரப்புக்கும் இடையே சிறந்த ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் என நான் பார்க்க விரும்புகிறேன். இவ்வாறு ட்ரம்ப் குறிப்பிட்டார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…