No products in the cart.
காசா குழந்தைகளிடத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு
இஸ்ரேல், கடந்த மே மாதத்தில் காசாவில் நடத்திய தாக்குதல்களில் 1,760 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்ட இறுதி அறிக்கையுடன் ஒப்பிடுகையில் தற்போது பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் பாலஸ்த்தீன அகதிகளுக்கான நிறுவனம் (UNRWA) வௌியிட்டுள்ள அறிக்கையில் காசா நகரில் சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு 21.5 சதவீதத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சுமார் 5 இல் 1 குழந்தைக்கு தற்போது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் காசாவில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தமது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி காசா பகுதியில் இஸ்ரேலிய படையினர் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் சுமார் 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் 16 பேர் மனிதாபிமான உதவிப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த பாலஸ்த்தீனியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.